நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் உள்ளன.

மத்திய அரசின் ‘உள்ளூர் மக்களுக்கான குரல்’ இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும், உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை வழங்கவும், விளிம்புநிலை மக்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய ரயில்வே அமைச்சகம் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  முன்னோடியான இத்திட்டம் 25.03.2022 அன்று தொடங்கப்பட்டது. 01.05.2023 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 728 ரயில் நிலையங்களில் 785 ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் உள்ளன.

‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ மூலம் அந்தந்த பகுதியில் பிரபலமான பொருட்கள் மற்றும் பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், உள்ளூர் நெசவாளர்களின் கைத்தறி பொருட்கள், கைவினைப்பொருட்கள், மசாலா டீ, காபி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வடகிழக்கு மாநிலங்களில் பாரம்பரிய ராஜ்போங்ஷி, ஜாபி போன்ற உடைகள், சணல் பொருட்கள் போன்றவையும், தென்னிந்தியாவில் முந்திரி பொருட்கள், மசாலா பொருட்கள், சின்னாளப்பட்டி கைத்தறி புடவைகள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 95 ரயில்நிலையங்களில் ’ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் உள்ளன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply