2022-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்குகிறார்.

2022 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை  வழங்குகிறார்.

டிஜிட்டல் அதிகாரம் பெற்ற, அறிவுப் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசு நிறுவனங்களால் புதுமையான டிஜிட்டல் முயற்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான, டிஜிட்டல் இந்தியா விருதுகள், அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் அடிமட்ட அளவிலான டிஜிட்டல் முன்முயற்சிகளையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொடர்புத்துறை, ரயில்வே  அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர்
திரு அல்கேஷ் குமார் சர்மா உள்ளிட்டோர் புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

நாளை காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்த விருது வழங்கும் விழா தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மத்திய அரசின் அமைச்சகங்கள்/ துறைகள்/ அலுவலகங்கள்/ நிறுவனங்கள், மாநில அரசு துறைகள்/ அலுவலகங்கள்/ நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஆகியவை விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை.

ஏழு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply