தொழில்நுட்ப ஜவுளிப் பாடத்திட்டத்தில் இளநிலை, முதுநிலை மேற்படிப்புகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் இரண்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிலநுட்ப ஜவுளி கல்விப் பாடத்திட்டத்தில் புதிய, இளநிலை, முதுநிலை படிப்புகள் கொண்டுவரவும், நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தில் புதிய பாடப் பிரிவுகளைச் சேர்ப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக தொழில்நுட்ப பாடப்பிரிவில் பயிற்சி வகுப்புகளுக்காக வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகம்  தொழில்நுட்ப ஜவுளி பாடப்பிரிவில் பலவிதமான துறை சார்ந்த அறிவாற்றலை வளர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.  குறிப்பாக சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயக் கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள் போன் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பல்வேறு நடடிவக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply