295.4 பில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி செய்து என்டிபிசி 11.6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசி  2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 295.4 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீத வளர்ச்சியாகும்.  தனிப்பட்ட முறையில் என்டிபிசி 254.6 பில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து கடந்த ஆண்டை விட 16.1 சதவீத வளர்ச்சியைப்  பெற்றுள்ளது.

நிலக்கரி உற்பத்தியிலும் என்டிபிசி மகத்தான சாதனை படைத்துள்ளது. 14.6 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து முந்தைய ஆண்டை விட 51 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

என்டிபிசி நிறுவு திறன் 70824 மெகாவாட்டாகும்.  அண்மையில் இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவுதிறனில் 3 ஜிகாவாட் அளவை கடந்துள்ளது.

எம். பிரபாகரன்

Leave a Reply