குடியரசுத்தலைவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜெய்பூரின் ராஜ்பவனில் உள்ள சம்விதான் உதையன் எனப்படும் அரசியலமைப்பு பூங்கா, மயூர் ஸ்தூபி,  தேசிய கொடிக்கம்பம், மகாத்மா காந்தி மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளை இன்று  (03.01.2023) திறந்து வைத்தார். மேலும்,  காணொலிக் காட்சி மூலம், ராஜஸ்தானில் உள்ள  சூரிய சக்தி மண்டலங்களில் உள்ள பரிமாற்ற அமைப்பைத் தொடங்கி வைத்து பின்னர் 1000 மெகாவாட் திறன் கொண்ட எஸ்ஜேவிஎன் லிமிடெட் நிறுவனத்தின் சூரிய சக்தித் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது ஜனநாயகம், துடிப்பானது மற்றும் உலக அளவில் பெரியதாகும். நமது ஜனநாயகத்திற்கு அடித்தளமாக இருப்பது நமது அரசியலமைப்பாகும். இந்த நிகழ்வில் பங்கு கொள்வது மூலம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பைப் பெற்றதாகவே உணர்கிறேன் என்றார். தேசத்தின் சார்பாக இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த அரசியலமைப்புப் பூங்காவில் கடந்த 3 ஆண்டுகளாக  ஓவியம் தீட்டியவர்களின் முயற்சிகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply