2023ம் ஆண்டின் முதல் பாதியில் போபாலில் 26-வது தேசிய மின்- ஆளுமை மாநாடு.

மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, மத்தியப் பிரதேச அரசுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்துக் கேட்டறிந்தனர். இந்த சந்திப்பு 2022 டிசம்பர் 16ம் தேதி போபால், நடைபெற்றது.  இந்தக் குழுவினர், அம்மாநில முதன்மைச் செயலாளர் திரு. இக்பால் சிங் பெயின்ஸ்,  பொது நிர்வாகத்துறை கூடுதல் செயலாளர்  திரு. வினோத் குமார், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்  திரு. மனீஷ் ரஸ்தோகி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

இந்தக்கூட்டத்தில், மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறையின் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ், 2021-ம்ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டில், மத்தியப்பிரதேசம்  7.3 சதவீதம் வளர்ச்சியை எட்டியிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.  மேலும், 2021-ம் ஆண்டுக்கான தேசிய இ-சேவைகள் வழங்கல் மதிப்பீட்டிலும் சிறப்பாகப் பணியாற்றிருப்பதற்கும், மத்தியப் பிரதேசத்தின் பொது நிர்வாகத்துறையில், பிரதரின் நல்லாட்சிக்கான விருகள் திட்டத்தின் கீழ், பல்வேறு விருதுகளைச் செயல்படுத்தியிருப்பதற்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக இந்தூர் நகரில்,  (நகர்புற) தூய்மை இந்தியா திட்டத்தையும், டாட்டியா மற்றும் கந்துவா மாவட்டங்களில் போஷான் அபியான் திட்டத்தையும் செயல்படுத்தியிருப்பது அமோக  வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், 2021-ம் ஆண்டுக்கான தேசிய இ-சேவைகள் வழங்கல் மதிப்பீட்டுக்கான தரவரிசையில் 5ம் இடம் பிடித்திருக்கிறது.  லோக் சேவைத்துறை மின்-ஆளுமையில் இருந்து நம்-ஆளுமை  என்ற மாதிரியைக் கொண்டு, சரியான நேரத்தில் பொதுமக்கள் சேவை உறுதித்திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பதன் மூலம், தரவரிசையில் 5ம் இடத்தை மத்தியப் பிரதேச மாநிலம் பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேச அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளில்,  அடுத்த ஆண்டு முதல் பாதியில், தலைநகர் போபாலில்,  26-வது தேசிய மின்-ஆளுமை மாநாடு நடத்தப்பட உள்ளதும்  இடம்பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தின்போது, 5 பேர் குழுவினர், அம்மாநில முதலமைச்சர். திரு. சிவ்ராஜ் சிங் சவ்ஹானையும் சந்தித்து, மத்திய அரசுடனான ஒருங்கிணைப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply