வீனஸ் (வெள்ளி) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் மற்றும் வளிமண்டலம் குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

(வெள்ளி) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் மற்றும் வளிமண்டலம்  குறித்த படிப்புகளுக்காக இஸ்ரோ முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவிஅறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஏரோனமி என்ற வார்த்தை 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூமி மற்றும் சூர்ய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களின் மேல் அடுக்கு வளிமண்டலம் குறித்த அறிவியல் படிப்பாக கருதப்படுகிறது. இது வேதியியல், இயக்கவியல், ஆற்றல் சமன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய படிப்பாகும்.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்த இரண்டு இயக்கங்களும், ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், அறிவியல் சமுதாயத்தினரின் பங்களிப்புடன் தேசிய அளவில் இதற்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

எம்.பிரபாகரன்

Leave a Reply