நிலக்கரி உற்பத்தி கடந்த 8 மாதங்களில் 17% அதிகரித்துள்ளது: நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தகவல்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் ஆண்டில் மொத்தம் 716.083 மில்லியன் டன்களும், 2021-2022 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மொத்தம்  778.19 மில்லியன் டன்களும் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை (நவம்பர் வரை), நாட்டில் 524.2 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 17 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 448.1 மில்லியன் டன்னாக இருந்தது. 07.12.2022 நிலவரப்படி நாட்டில் நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களில் 31 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது என்றும், இது சராசரியாக 11 நாட்களுக்கு 85 சதவீத பிஎல்ஃப் தேவைக்கு போதுமானது என்றும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை.

இத்தகவலை நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply