சுதேசி (ஸ்வதேஷ்) தர்ஷன் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் நிறைவேற்றப்பட்ட 4 திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அர்ப்பணிக்கப்பட்ட முக்கியத் திட்டங்கள்:-

திருக்காஞ்சியில் உள்ள புனித கங்கை வராகு நதீஷ்வர் கோயிலில் ரூ.5.82 கோடி செலவில் யாத்ரிகர்களுக்கான சிறப்பு வசதிகள், ரூ. 1.33 கோடி மதிப்பில்  ஆதி மண்டபம் புனரமைப்பு மற்றும் பாரதி பூங்காவில் ஒளிரூட்டும் வசதிகள், காரைக்கால், திருநள்ளாறு கோவிலில் ரூ.7.40 கோடி மதிப்பில் ஆன்மீகப் பூங்காவிற்கான மேம்பாட்டு வசதிகள் மற்றும் சின்ன வீராம்பட்டிணத்தில்  ரூ.3.51 கோடி மதிப்பில்  ஈடன் கடற்கரையின் மேம்பாட்டு பணிகள்:

மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி 2022 டிசம்பர் 13ம் தேதி தமது புதுச்சேரி  பயணத்தின் போது, சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுதேசி (ஸ்வதேஷ்) தர்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ. 133 கோடி மதிப்பில் ஆதிமண்டபம் புனரமைப்பு மற்றும் பாரதி பூங்காவில் ஒளிரூட்டும் வசதி, திருக்காஞ்சியில் உள்ள புனித கங்கை வராகு நதீஷ்வர் கோயிலில் ரூ.5.82 கோடி செலவில் யாத்ரீகர்களுக்கான சிறப்பு வசதிகள்,  திருநள்ளாறு கோவிலில் ரூ.7.40 கோடி மதிப்பில் ஆன்மீகப் பூங்காவிற்கான மேம்பாட்டுப் பணிகள்  மற்றும் சின்னவீராம்பட்டிணத்தில்  ரூ.3.51 கோடி மதிப்பில்  ஈடன் கடற்கரையின் மேம்பாட்டு பணிகள் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தமது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முதலமைச்சர் என். ரங்கசாமி ஆகியோருடன் 4 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

திவாஹர்

Leave a Reply