மாலத்தீவு மற்றும் பங்களாதேஷின் குடிமைப்பணி சிவில் அலுவலர்களுக்கான இரண்டு வார திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்கியது.

மாலத்தீவு மற்றும் பங்களாதேஷின் குடிமைப்பணி அலுவலர்களுக்கான இரண்டு வார திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்கியது. மாலத்தீவைச் சேர்ந்த 27 அதிகாரிகளும்,  வங்கதேசத்தைச் சேர்ந்த 39 அதிகாரிகளும்  இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.

இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘வசுதைவ குடும்பகம்’ மற்றும் ‘முதலில் அண்டை நாடுகள்’ கொள்கைகளுக்கு ஏற்ப  வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆட்சி மற்றும் உறுதியான பொது சேவையில் உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள அண்டை நாடுகளுக்கு தங்கள் குடிமைப்பணி அதிகாரிகளின் திறனை மேம்படுத்த இதில் இந்தியா உதவுகிறது.

இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டம், கொள்கைகள் மற்றும் நடைமுறைக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு அர்ப்பணிப்புள்ள முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிவில் அதிகாரிகளுக்கு உதவும். மக்களுக்கு உறுதியான மற்றும் தடையற்ற சேவைகளை வழங்குவதற்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக  இது அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க அமர்வுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் திரு பாரத் லால் தலைமை தாங்கினார். அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் வகையில், பயனுள்ள பொது சேவை வழங்குவதை வலியுறுத்தினார். தரமான பொது சேவைகளை அணுகக்கூடிய சூழலை உருவாக்குவதில்  அரசு அதிகாரிகளின் பங்கை விரிவாகக் கூறினார். மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த நல்ல நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்த உஜ்வாலா யோஜனா போன்ற இந்தியாவின் நல்லாட்சி மாதிரிகளின் உதாரணங்களையும் அவர் எடுத்துக்காட்டினார்.

ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமானக் குடிநீரை குழாய் மூலம் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான ஜல் ஜீவன் இயக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2019-ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணத்தின் போது, நல்லாட்சிக்கான தேசிய மையம், மாலத்தீவின் குடிமைப்பணி சிவில் சர்வீஸ் கமிஷனுடன் 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளின்  திறனை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2024 ஆம் ஆண்டிற்குள் 1,800 அரசு ஊழியர்களின் திறனை வளர்ப்பதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் அரசாங்கத்துடன் கையெழுத்தானது.

நிகழ்ச்சியின் போது, ஸ்மார்ட் சிட்டி, இந்திரா பர்யவரன் பவன்: ஜீரோ எனர்ஜி பில்டிங், இந்திய நாடாளுமன்றம், புது தில்லி முனிசிபல் கவுன்சில், பிரதான்மந்திரி சங்க்ரலயா போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிறுவனங்களைப் பார்வையிட பங்கேற்பாளர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.

தொடக்க அமர்வின் போது, டாக்டர். பூனம் சிங், டாக்டர். அசுதோஷ் சிங், டாக்டர் சஞ்சீவ் சர்மா ஆகியோர் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டனர்.

திவாஹர்

Leave a Reply