திருச்சி தேசிய கல்லூரியில் முப்பெரும் விழா!-ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சி வருகை.

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்தும் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, மகாகவி பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200 வது பிறந்த தினத்தையும் சிறப்பிக்கும் வகையில் ‘முப்பெரும் விழா’ திருச்சி தேசிய கல்லூரியில் இன்று (12/12/2022) மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

தமிழக ஆளுநரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
ullatchithagaval@gmail.com

Leave a Reply