குடியரசுத் தலைவரின் தரநிலை மற்றும் கொடியின் புதிய வடிவமைப்பும் இந்தியக் கடற்படையின் சின்னமும் வெளியிடப்பட்டது.

கடற்படை தினத்தன்று (2022 டிசம்பர் 04) விசாகப்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்திய கடற்படைக்கான ஜனாதிபதியின் தரநிலை மற்றும் கொடி மற்றும் இந்திய கடற்படை சின்னத்திற்கான  புதிய வடிவமைப்பை அறிமுகம் செய்ய  மாண்புமிகு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்தகால காலனித்துவத்திலிருந்து விலகிச் செல்வதற்கான தேசிய முயற்சியின் எதிரொலியாக, கடற்படையின் கொடி நமது வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறும் புதிய வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டது.  வெள்ளைக் கொடியில்  சிவப்புக்  கிடைமட்ட மற்றும் செங்குத்துக் கோடுகள்  மாற்றப்பட்டு  நீல எண்கோணத்திற்குள்  தங்க நிறத்தில் தெளிவான இரட்டை நங்கூரமும் அவற்றின் மேல் தேசியச் சின்னமும், நங்கூரத்தின் கீழ்  ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தேசிய வாசகமும் மேல் இடது மூலையில் தேசியக் கொடியும் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply