2022 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்களின் சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு கணிசமாக குறைந்திருக்கிறது.

2022 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்களின் சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு கணிசமாக குறைந்திருக்கிறது.

சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்புக்கும், (ஏடி&,சி இழப்பு) சராசரி விநியோக மதிப்பீடு மற்றும் சராசரியாக உணரக்கூடிய வருவாய்க்கும் (ஏசிஎஸ்-ஏஆர்ஆர்) இடையேயான இடைவெளியே, மத்திய மின்துறையைச் சார்ந்துள்ள மின் விநியோக நிறுவனங்களின் (டிஐஎஸ்சிஓஎம்எஸ்) வருடாந்திர செயல்பாடுகளைக் கணிக்கும் காரணியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஐஎஸ்சிஓஎம்எஸ்-களின்  ஏடி&சி இழப்பு 21 முதல் 22 சதவீதமாக உள்ளது. எனவே இந்நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த மத்திய மின்சாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2021-22-ம் நிதியாண்டின் முதற்கட்ட ஆய்வறிக்கையின்படி, 56 நிறுவனங்கள் 96 சதவீதத்திற்கும் அதிகமான மின் உற்பத்தியில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.   இதன் மூலம் 2021-ம்  நிதியாண்டில் 22 சதவீதமாக இருந்த மின் விநியோக நிறுவனங்களின் சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு 2022-ம் ஆண்டு நிதியாண்டில் 17 சதவீதமாக குறைந்துள்ளது.

 சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு, குறைந்திருப்பதன் மூலம் கிடைத்துள்ள லாபத்தொகை தேவைக்கேற்ப மின்சாரத்தை வாங்கிக்கொள்ளவும், அதனை பராமரிக்கவும் பயன்படுகிறது. இதன் மூலம் நுகர்வோரும் பயனடைகின்றனர். சராசரி தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பு குறைந்திருப்பதால்,   சராசரி விநியோக மதிப்பீடு மற்றும் சராசரியாக உணரக்கூடிய வருவாய்க்கும் (ஏசிஎஸ்-ஏஆர்ஆர்) இடையேயான இடைவெளியும் குறைந்திருக்கிறது. 2020-21-ம் நிதியாண்டில் கிலோவாட்சுக்கு 69 பைசாவாக இருந்த இடைவெளி, 2022-23-ம் நிதியாண்டில் கிலோவாட்சுக்கு 22 பைசாவாக குறைந்திருக்கிறது.

மத்திய மின்துறை மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளின் பலனாக ஓராண்டில் ஏசிஎஸ்-ஏஆர்ஆர்-இன் இடைவெளி 47 பைசாவாகவும், ஏடி&,சி இழப்பு 5 சதவீதமும் குறைந்திருக்கிறது. மின்துறையின் துரிதமான நடவடிக்கைகளின் பலனாக இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் மாநில அரசுகளும் தங்களின் கீழ் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கும் சீர்திருத்த நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை பூர்த்தி செய்ய ஏதுவாக மின்சார துறையும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின்துறைக்கான முதலீடும் அதிகரிக்கும்.

திவாஹர்

Leave a Reply