இந்திய கடற்படை கப்பல்களான சிவாலிக் மற்றும் கமோர்டா, வியட்நாமின் ஹூ சி மின் சிட்டிக்கு பயணம்.

இந்திய கடற்படை கப்பல்களான சிவாலிக்கும், கமோர்டாவும், வியட்நாமின் ஹூ சி மின் சிட்டிக்கு பயணம் மேற்கொள்கின்றன.. இந்தக் கப்பலில், செல்லும் நிபுணர்கள், வியட்நாமின் மக்கள் கடற்படையினருடன் கலந்துரையாட உள்ளனர்.

இந்தியா- வியட்நாம் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர உறவுகளின் 50-வது ஆண்டு விழாவையொட்டியும், இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு, கடற்படை கப்பல்களான சஹ்யாதி, காட்மட் ஆகியவை ஹூ சி மின் சிட்டிக்கு பயணம் மேற்கொண்டன.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிவாலிக் மற்றும் கமோர்டா கப்பல்களின் பயணம், இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியமான விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட உள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இவ்விரு கப்பல்களும், பன்னோக்கு வசதி கொண்ட ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்தவை.

திவாஹர்

Leave a Reply