ரயில்வேத் துறையின் பயணிகள் சேவைகள் மூலம் வருவாய் 76 சதவீதமாக அதிகரிப்பு.

ரயில்வேத் துறையின் பயணிகள் சேவைகள் (2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரை) மூலம் ரூ.43,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 76 சதவீதமாக  அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு பயணிகள் சேவைகள் மூலம் ரூ. 24,631 கோடி வருவாய் கிடைத்தது.

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சுமார்  5,365 லட்சங்களாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,860 லட்சமாக இருந்தது. இது 10 சதவீதம் அதிகமாகும். 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் இருந்து ரூ.34,303 கோடிகள் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.22,904 கோடியாக இருந்தது. இது 50 சதவீதம் அதிகமாகும்.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் மொத்த எண்ணிக்கை 35,273 லட்சமாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13,813 லட்சமாக இருந்தது.  இது 155 சதவீதம் அதிகமாகும். 2022 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில் இருந்து ரூ.9,021 கோடிகள் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,728 கோடியாக இருந்தது. இது 422 சதவீதம் அதிகமாகும்.

திவாஹர்

Leave a Reply