தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

2 நாள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். மம்தா பானர்ஜியை வாசலுக்கு வந்து முதல்வர் வரவேற்றார். கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் மம்தா வழங்கினார். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply