நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒட்டுமொத்த அணுகுமுறையை அரசு மேற்கொண்டுள்ளது; தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் உரை.

குஜராத் காந்தி நகரில் உள்ள தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (அக்டோபர் 17, 2022) உரையாற்றிய  பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒட்டுமொத்த அணுகுமுறையை அரசு மேற்கொண்டுள்ளது என்று  கூறினார்.  தேசிய பாதுகாப்பு என்பது நிலம்  மற்றும் கடல் எல்லைகள், வான் எல்லை, இணையதளம், தரவு, விண்வெளி, தகவல், எரிசக்தி, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பை உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்தார். அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கான திறன் நம் நாட்டிடம் உள்ளது என்றும் அவர் மக்களுக்கு உறுதி அளித்தார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புக்கிடையே புதியவகையிலான அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக அவர் கூறினார். தீவிரவாதத்துக்கு இடையே இணையதளம் மற்றும் தகவல் தொடர்பு மீதான தாக்குதல் பாதுகாப்பு அச்சுறுத்தலில் புதிய வகைகள் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி ஆகிய பிரச்சனைகள் வேறுபட்டவையாக இருந்தாலும் இது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்று அவர் கூறினார்.  இத்தகைய சவால்களை எதிர்கொள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து அவசியம் பணியாற்ற வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

திவாஹர்

Leave a Reply