ரயில்வே பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய ரத்ததான முகாம்.

முதன்முறையாக  ரயில்வே பாதுகாப்பு படை மூலம் மிகப்பெரிய ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை நிறுவனத் தினத்தையொட்டி செப்டம்பர் 17 முதல் 20 வரை நடைபெற்ற ரத்ததான முகாமில், 3946 ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரத்ததானம் செய்தனர். செப்டம்பர் 20, 2022 அன்று ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் தேசிய  பட்டு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர்  தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் லக்னோவில் உள்ள ஜக்ஜீவன் ராம் ரயில்வே பாதுகாப்புப் படை அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

பின்னர் பேசிய அவர், லக்னோவில் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் மூன்றாவது பட்டாலியன் வளாகத்தில், 3 கோடி ரூபாய் செலவில் பயிற்சி மையம், பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும் என்றார்.

திவாஹர்

Leave a Reply