இலங்கையில் கேரள கஞ்சா பறிமுதல்!-2 பேர் கைது.

இலங்கை, மைலடி பகுதிக்கு வடக்கு கடற்பரப்பில் வடக்கு கடற்படை சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது தொண்டமநாரு நோக்கி சென்ற படகொன்றில் பயணித்த நபர்கள் கடற்படையின் நடவடிக்கைகளினால் படகில் இருந்த பல பைகள் கடலில் வீசி தப்பிச் செல்ல முயன்றனர். பின்னர் கடற்படையினர் அந்த படகைத் துரத்திச் சென்று 2 சந்தேக நபர்களையும் ,படகையையும் கடலில் வீசிய சுமார் 124 கிலோகிராம் மற்றும் 65 கிராம் கேரள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் நெல்லியடி மற்றும் வெல்வெடிதுரை பகுதிகளில் குடியிருப்பதாக அடையாளம் காணப்பட்டள்ளனர். சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கேரள கஞ்சா மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துரை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply