போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு மளிகை மற்றும் உணவு பொருட்களை இலவசமாக வழங்கிய இலங்கை கடற்படையினர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ‘மிதுரு மிதுரோ’ போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு, மளிகை மற்றும் உணவு பொருட்களை இலங்கை கடற்படையினர் இலவசமாக வழங்கி உள்ளனர்.

கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்ச்சியில், இலங்கை கடற்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மது, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதின் காரணமாக, 338 நபர்கள் இந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN April 6, 2020 9:22 pm

Leave a Reply