கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து வேலி அமைத்த எஸ்டேட் நிர்வாகம்!- வேலியை உடைத்தெரிந்த கிராம மக்கள்!- ஏற்காட்டில் பதட்டம்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிலியூர் கிராமம். இங்கு 800-க்கும் மேற்பட்ட குடும்ப மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் உள்ள மலை உச்சியில் மலை ஈஸ்வரன் கோவில் உள்ளது. ஏற்காட்டில் உள்ள 67 கிராமங்களில் லிங்கம் வைத்தும் வழிபாடு நடத்தப்படும் இரண்டு கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும். கடந்த மாதம் 17 ந்தேதியன்று இந்த கோவிலின் கும்பா அபிஷேகம் முடிந்து, மண்டல பூஜை நடைப்பெற்று வருகிறது.

பிலியூர் கிராமத்தில் இருந்து மலை ஈஸ்வரன் கோவிலுக்கு தனியார் எஸ்டேட் ஒன்றில் உள்ள வழியாகத்தான் பரம்பரை பரம்பரையாக மக்கள் சென்று வந்துள்ளனர். மேலும், திருவிழா காலங்களில், கோவிலில் இருந்து சாமி சிலையை ஊருக்குள் எடுத்து வந்து சுற்றி விட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும். இவ்வாறு இருக்க, நேற்று எஸ்டேட் உரிமையாளர் ரகுபதி மக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை மறித்து வேலி அமைத்தார்.

இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட பிலியூர் கிராம மக்கள் அங்கு குவிந்தனர். எஸ்டேட் உரிமையாளர் அமைத்த வேலியை உடைந்தெரிந்தனர். பின்னர் அனைவரும் சென்று கோவிலில் வழிபாடு செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-நவீன் குமார்.

தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சினர் புகார்! -மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.
திருச்சி தேசிய கல்லூரி எதிரே விபத்து!

Leave a Reply