திருச்சி தேசிய கல்லூரி எதிரே விபத்து!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில், திண்டுக்கல் சாலையில் தேசிய கல்லூரி எதிரில், இன்று (02.04.2019) மதியம் 12.10 மணியளவில், முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்றின் முன் சக்கரம் திடீரென கட்டானதால், பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றோடு, ஒன்று மோதவேண்டிய சூழல் உருவானது.

இச்சம்பவத்தில் கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், பின்னால் வந்த கார் ஒன்று, கேஸ் சிலிண்டர் லாரியின் பின்புறம் மோதியதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. கார் ஓட்டி வந்த நபர் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து வேலி அமைத்த எஸ்டேட் நிர்வாகம்!- வேலியை உடைத்தெரிந்த கிராம மக்கள்!- ஏற்காட்டில் பதட்டம்.
மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்  கைது.

Leave a Reply