மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்  கைது.

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கரடியூர் அடுத்த தாளூர் காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி காளியம்மாள், (வயது70) இவரது 4 மகன்கள் மற்றும் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் கணவர் இறந்த நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவர் கடந்த 16 அன்று ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் தனது முதியோர் ஓய்வூதியத் தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டிற்கு திரும்பியுள்ளார். முளுவி பிரிவு ரோடு வரை பஸ்சில் சென்று அங்கிருந்து நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது கரடியூரை சேர்ந்த சுந்தரம் மகன் அசோக், (வயது32) என்பவன் காளியம்மாளை வழிமறித்து கத்திதைய காட்டி மிரட்டியுள்ளார். அவரிடம் இருந்து 1000 ரூபாய் பணம் மற்றும் காதிலிருந்த 3/4 பவுன் தோடுகளை பிடுங்கி அங்கிருந்து தப்பி ஓடி பின்னர் தலைமறைவாகி விட்டான்.

இது குறித்து, காளியம்மாள் ஏற்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கரடியூரில் இருந்த சுந்தரத்தை ஏற்காடு போலீசார் கைது செய்தனர்.

-நவீன் குமார்.

திருச்சி தேசிய கல்லூரி எதிரே விபத்து!
இலங்கையில் 910 கிலோ கஞ்சா பறிமுதல்!

Leave a Reply