தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 958 பேர் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26.03.2019 அன்று நிறைவடைந்ததையொட்டி,  வேட்பு மனு மீதான பரிசீலனை 27.03.2019 அன்று தொடங்கியது. இந்நிலையில் வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற இன்று மதியம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில்  1414 ஆண் வேட்பாளர்களும், 171 பெண் வேட்பாளர்களும், 2 திருநங்கைகளும், ஆக மொத்தம் 1587 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 617 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பட்ட நிலையில், 958 பேர்  இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

வாக்களிக்க பணம், பொருள் கொடுப்பதோ அல்லது வாங்குவதோ தண்டணைக்குரிய குற்றமாகும்!- இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.
மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் நடைப்பெற்ற சோதனையில் 143.47 கோடி ரொக்கப் பணம் உள்பட மொத்தம் 539.992 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

Leave a Reply