திருவெறும்பூர் பெல் (BHEL) ரவுண்டாணாவில் கார் மோதி விபத்துக்குள்ளானது!

பட்டுகோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது 33), தந்தை பெயர் துல்கருணை, இவர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருச்சிக்கு காரில் வந்துள்ளார்.

இன்று அதிகாலை திருச்சி பழைய பால் பண்ணை அருகே இருந்து, தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் மாகாலெட்சுமி என்ற பெண்ணும் காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் இன்று காலை 5.45 மணிக்கு திருவெறும்பூர், கணேசா அருகே உள்ள  பெல் (BHEL) ரவுண்டாணாவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய போலிசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்துல்லா ஓட்டிச் சென்ற HYUNDAI XCENT CRDI S BSIV, TN-49 BY 0598 இந்த கார் P.சாந்தா என்பருக்கு சொந்தமானது. இந்த காருக்கான இன்ஷ்சூரன்ஸ் 2016 மார்ச் 29-ந்தேதியுடன் காலாவாதியாகிவிட்டது. இன்ஷ்சூரன்ஸ் இல்லாமலே இந்த கார் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் இயக்கப்பட்டுள்ளது என்பது வாகன பதிவு ஆவணங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

-ஆர்.சிராசுதீன்.

உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தள்ளி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை விரட்டி பிடித்த காவலர்கள்!
மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி டிஜிபி-க்களை நியமிக்க முடியாது!- உச்ச நீதி மன்ற உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply