மாட்டுப்பொங்கல் தினத்தன்று திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிகட்டு விழா!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டுப்பொங்கல் தினத்தன்று திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் நடத்தப்படும் ஜல்லிகட்டுப் பணிக்கான பேரிகாடு அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியது. அதேபோல் ஜல்லிகட்டு காளைகளுக்கான பயிற்சிகளும் நடந்து வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பரம்பரிய மற்றும் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிகட்டு போட்டி தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்படுவது வழக்கம்.

அதன் ஒருப்பகுதியாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் மாட்டு பொங்கல் தினத்தன்று ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படும். அதுபோல் இந்த ஆண்டும் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் வழங்கமாக சூரியூரில் ஜல்லிகட்டு போட்டி, சூரியூரின் ஊரின் மந்தையில்தான் நடத்தப்படும். ஆனால் தற்போது பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, வேறு இடத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்த முடிவு செய்பட்டு, நற்கடல்குடி கருப்பண்ணசாமியிடம் சூரியூர் பொதுமக்கள் உத்தரவு கேட்டு, சூரியூர் அருகே உள்ள சங்கிலி கருப்பு பெரியகுளத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அந்த இடத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கான பேரிகார்டு அமைக்கும்பணி இன்று முறையாக பூஜையுடன் தொடங்கியது.

இதற்கிடையில் திருச்சி மாவட்டத்தில் சூரியூரில் நடத்தப்படும் ஜல்லிகட்டு போட்டிதான் முதல் ஜல்லிகட்டு போட்டி என்பதால், ஜல்லிகட்டு போட்டிக்கு காளைகளை தயார் செய்யும் விதமாக ஜல்லிகட்டு மாடுகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் நீச்சல், மண் மற்றும் குப்பைகளில் பாயும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.

இதோ, கடந்த 2018-ம் ஆண்டு சூரியூரில் நடைப்பெற்ற ஜல்லிகட்டு விழா!

-ஆர்.சிராசுதீன்.

திருச்சி, வேங்கூர் பூசைப்படித்துறை அருகே காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் பிணம்!
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுப்பது வாடிக்கைதான்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்தப் பேட்டி.

Leave a Reply