7 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்!-இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு.

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பீஹார், ஹரியானா, உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம், மேகாலயா, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

அதன்படி, பீஹார் ஆளுநராக லால்ஜிடாண்டன், ஹரியானா ஆளுநராக சத்யதேவ் நாராயணன், உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுர்யா, ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக சத்ய பிரகாஷ் மாலிக், சிக்கிம் ஆளுநராக கங்கா பிரசாத் டகாட், மேகாலயா ஆளுநராக டதகட்டராய், திரிபுரா ஆளுநராக கேப்டன் சிங் சோலங்கி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply