கிரீடம் வைத்து வரவேற்கப்பட்ட தமிழக அரசு பள்ளி மாணவர்கள்!

ஏற்காடு, காக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் தலையில் கிரீடம் வைத்து வரவேற்கப்பட்டனர்.

கோடை விடுமுறை முடிந்து 01.06.2018 அன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டம, ஏற்காடு தாலுக்காவிற்குட்பட்ட காக்கம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை தலையில் கிரீடம் வைத்து வரவேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட ஏற்காடு ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் ஷேக் தாவூத், அம்மா டிரஸ்ட் இயக்குனர் புகழேந்தி, ரீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ராபர்ட் ஆகியோர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தலையில் கிரீடம் வைத்தும், பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

மேலும் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ் அனைத்து மாணவர்களுக்கும்  பாட புத்தகங்கள், புத்தக பை, காலணிகள்  மற்றும் ஸ்வெட்டர் உள்ளிட்டவைகளை வழங்கினார். கிரீடம் வைத்து வரவேற்கப்பட்ட நிகழ்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

-நவீன்குமார்.

Leave a Reply