எங்கள் கேள்விக்கு என்ன பதில்?- தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே மற்றும் செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன் ஆகியோர் இதற்கு பிறகாவது பதில் சொல்வார்களா?

தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே.

தந்தித் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன்.

திறமையானவர்களில் பல பேர், நேர்மையானவர்களாக இருப்பதில்லை என்பதற்கு, தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே மற்றும் செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன் ஆகியோரை, மிக சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை ஆங்கில  மற்றும் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் பதட்டத்தையும் ஏற்படுத்திய செய்தி சேகர் ரெட்டியின் டைரி குறிப்பாகும்.

சேகர் ரெட்டியின் டைரி குறிப்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு, சேகர் ரெட்டியின் தரப்பில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அந்த பட்டியலில் தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே மற்றும் செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன் ஆகியோரின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக செய்தி வெளியானது. இதைக் கேட்டு மற்றவர்களைப் போல நாமும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

-என்ற வள்ளுவ பெருந்தகையின் கருத்தை வாழ்நாள் லட்சியமாக கருதி செயல்பட்டு வரும் நாம், உடனே செய்தி பதிவிடுவதில் அவசரம் காட்டாமல், மேற்காணும் செய்திகளில் உள்ள உண்மை தன்மை குறித்து தெரிந்துக் கொள்வதற்காக தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே மற்றும் செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன் ஆகியோரின் கருத்துக்களை தெரிந்துக் கொள்வதற்காக பல முறை, பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அது நடக்கவில்லை. வேறு வழி இல்லாமல் தந்தித் தொலைக்காட்சி அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அங்கேயும் முறையான பதில் இல்லை.

ஆனாலும், நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தோம். ரெங்கராஜ் பாண்டே தனது அலைபேசி எண்ணை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக தந்தித் தொலைக்காட்சி அலுவலக பணியாளர் தரப்பில் இருந்து முடிவாக பதில் கிடைத்தது. அதன் பிறகும் எமது முயற்சியை தொடர்ந்தோம்.

ஆம், 09.12.2017 அன்று எழுத்துப்பூர்வமானக் கடிதத்தை தந்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் ரெங்கராஜ் பாண்டே மற்றும் செய்தி தொகுப்பாளர் ஹரிஹரன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தோம். இன்றோடு (09.03.2018) சரியாக 3 மாதங்கள் ஆகிறது. இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பொதுவெளியில் இது சம்மந்தமாக அவர்கள் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. அவர்கள் இருவரது மௌனமும் எதைக் காட்டுகிறது? என்பதை  நமது வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

ஆனால், கடந்த சில நாட்களாக ரெங்கராஜ் பாண்டே குறித்தும், தந்தித் தொலைக்காட்சி நிர்வாகத்தைக் குறித்தும், சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதுக் குறித்து இருத்தரப்பும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

உப்பு பெறாத விசியத்திற்கெல்லாம் உலகத்தைத் கூட்டி ஒப்பாரி வைக்கும் ரெங்கராஜ் பாண்டே, தனது விசியத்தில் மட்டும் மௌனம் காப்பது ஏன்?

ஆம், இந்த செய்தியின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டதைப் போல, திறமையானவர்களில் பல பேர் நேர்மையானவர்களாக இருப்பதில்லை!- என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. venkataraman March 10, 2018 10:45 pm

Leave a Reply