பேருந்திற்காக சாலையில் காத்திருக்கும் பள்ளி மாணவிகள்! – பயமறியாத இளங்கன்றுகள் …!

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் வரும் வழியில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது. இங்கு சாலையையொட்டியே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்கும் வகையில் அதே வளாகத்தில் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர்.

நாச்சியார்கோவிலைச் சுற்றியுள்ள திருநறையூர், வண்டிப்பேட்டை, வண்டுவாஞ்சேரி போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து நடந்தும், சைக்கிளிலும், பேருந்திலும் மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி துவங்கும் போதும், பள்ளி விடும் போதும் மாணவிகள் சாலையோரம் கும்பலாக பாதுகாப்பற்ற நிலையில் காத்திருக்கின்றனர்.

இவ்வழி கும்பகோணத்தையும், திருவாரூரையும் இணைக்கும் முக்கியச் சாலை என்பதால் பஸ், லாரி, வேன், கார் என்று எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படும்.

இப்பள்ளி முன் இருபுறமும் வேகத்தடை மட்டுமே அமைத்துள்ளனர். பள்ளி துவங்கும் போதும், பள்ளி விடும் போதும் காலை, மாலை வேளையில் போலீஸாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தால், மாணவிகள் அச்சமின்றி சாலையைக் கடக்கவும், பஸ் ஏறி, இறங்கவும் வசதியாக இருக்கும்.

-க.குமரன்.

One Response

  1. Makkal Nalam Venkataraman February 8, 2018 7:25 pm

Leave a Reply