மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பெல் பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!


பெல் பாரத மஸ்தூர் சங்கம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் தொழிலாளர்களுக்கு பாதகமானவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் திருச்சி திருவெறும்பூர் பெல் பயிற்சி மையத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.

மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தொழிலாளர்களின் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யவில்லை. இசி.எஸ்.எஸ் வரியில் கல்வியுடன் மருத்துவத்தையும் இணைத்து 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தியதை கண்டித்தும், நலிந்துள்ள பொதுதுறை நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கு மறுசீரமைப்பு நிதி ஒதுக்காதது மற்றும் பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை கண்டித்தும், குறைந்த பட்ச பென்ஷன் தொகையான ஆயிரத்தை உயர்த்தி வழங்காததை கண்டித்தும் நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது. 

திருச்சி, திருவெறும்பூர் பெல் பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயல்தலைவர் விஷாகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.  நிர்வாகி மணி மற்றும் பாரத மஸ்தூர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.  துணைச்செயலாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply