தொலைக்காட்சி சேனல்களில் ஆணுறைகளின் விளம்பரங்களை இரவு 10 மணிக்கு மேல் காலை 6:00- க்குள் மட்டும்தான் ஒளிபரப்ப வேண்டும்!

condomC_Users_UTL_Desktop_Telecast of Condom Advt .11.12.20171 C_Users_UTL_Desktop_Telecast of Condom Advt .11.12.20172

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான  அனைத்து பொருட்களையும் தொலைக்காட்சியில் வெளிவரும் விளம்பரங்களை பார்த்தே வாங்கும் வழக்கம் தற்போது மக்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட வயதினருக்கான ஆணுறைகளின் விளம்பரங்களை ஆபாசமான முறையில் இரவு, பகல் என்று கருதாமல் 24 மணி நேரமும் தொலைக்காட்சி மற்றும் செய்தி சேனல்கள் எப்படியாவது வருவாய் ஈட்ட வேண்டும் என்ற சுயநல எண்ணத்தோடு, அநாகரீகமான முறையில் ஒளிபரப்பி வருகின்றன.

இத்தகைய விளம்பரங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மனதை பெரிதும் பாதிக்கின்றன. இதுக்குறித்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் குழந்தைகள் கேள்வி கேட்கவும் தொடங்கி விட்டார்கள். குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றனர்.

இதுபோன்ற விளம்பரங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கண்களில் தென்பட கூடாது என்பதற்காக, ஆணுறைகளின் விளம்பரங்களை இரவு 10 மணிக்கு மேல் காலை 6:00- மணிக்குள் மட்டும்தான் ஒளிபரப்ப வேண்டும் என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com