தடை செய்யப்பட்ட ‘கிளைபோசேட்’ இரசாயன பொருளை கடத்திச் சென்ற 2 இந்தியர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

sln sln1 sln2 sln3 sln4 sln5

வேளாண் நிலங்களையும், நீரையும் விஷமாக்கி, மனிதர்களுக்கு சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரிழிவு போன்ற கொடிய நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கும் “கிளைபோசேட்- Glyphosate” என்ற (களைக்கொல்லி) இரசாயன பொருளுக்கு, இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. “கிளைபோசேட்- Glyphosate” விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இலங்கையில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 710 கிலோ “கிளைபோசேட்- Glyphosate” இரசாயன பொருளை கடல் வழியாக கடத்திச் செல்ல முயற்சித்த 2 இந்தியர்களை, மன்னார் கலங்கரை விளக்கின் கடற்பகுதியில் தடுத்து நிறுத்தி, இலங்கை கடற்படையினர் நேற்று (25 நவம்பர்) காலை கைது செய்துள்ளனர்.

 -என்.வசந்த ராகவன்.