ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள காலிங்க இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரீஸ் டெக்னாலஜி யுனிவெர்சிட்டி (Kalinga Institute of Industrial Technology University) 13-வது பட்டமளிப்பு விழாவில், இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று கலந்து கொண்டார்.
முன்னதாக, புவனேஸ்வர் விமான நிலையத்தில், இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, ஒடிசா ஆளுநர் எஸ்.சி.ஜமீர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில், ஒடிசா ஆளுநர் எஸ்.சி.ஜமீர் மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.