திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம்!

412 (1)

3 (1)

திருச்சி, காட்டூர் பாப்பாக்குறிச்சியில் உள்ள  உருமு தனலெட்சுமி கல்லூரி இயற்பியல் துறை சார்பில், “தற்போதைய அறிவியல் பொருட்களும், அதன் பயன்பாடும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

இக்கருத்தரங்கில் ஹாங்ஹாங் “சிட்டி” பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் டாக்டர்.ஏ.எல்.ராய் வெள்ளைச்சாமி, போர்ச்சுக்கல் கொய்ம்ப்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.பாலு கிருஷ்ணக்குமார், மஸ்கட் உயர் தொழில்நுட்பத்துறை கல்லூரியை சேர்ந்த வேதியியல் பேராசிரியர்கள் சி.பி.தனலெட்சுமி, டாக்டர்.ராமலிங்கம் பெரியசாமி மற்றும் அமெரிக்கன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் அயலக அறிவியல் அறிஞர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உருமு தனலெட்சுமி கல்லூரியின் முதல்வர் பொன் சக்திவேல் இக்கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார். இதில் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.என். சீனிவாசன், தலைவர், கே.ராமகிருஷ்ணன், செயலாளர், பத்மா ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நானோ மின்னனுவியல், ஒளி மின்னனுவியல், நானோ துகள்களின் செயல்பாடு, செயற்கை எலும்புகள் மற்றும் பல் மருத்துவதுறையில் பாலிமர் நானோ துகள்களின் பயன்கள், பசுமை வேதியியல் துறையில் நானோ துகள்களின் செயல்பாடுகள் பற்றி இக்கருத்தரங்கத்தில் விரிவாக பேசினார்கள்.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தார்கள்.

பல ஆராய்ச்சி கட்டுரைகளை தொகுத்து அதை ஒரு நூலாக இக்கருத்தரங்கில் வெளியிட்டனர். தேர்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

-ஆர்.சிராசுதீன்.