சீமைக்கருவேல மரங்களை அகற்றாத கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Hon'ble Thiru. Justice P. Kalaiyarasan.

Hon’ble Thiru. Justice P. Kalaiyarasan.

மதுரை உயர் நீதிமன்ற கிளை உள்ளிட்ட 13 மாவட்டங்களி்ல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 13 மாவட்டங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என 13 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

முனைவர்.ச.நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்.

முனைவர்.ச.நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கலையரசன், செல்வம் ஆகியோர் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 64 சதவீத சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதாகவும், தனியார் நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் சிக்கல் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தனியார் நிலங்களிலும் சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அதற்குரிய தொகையை இரு மடங்காக மாவட்ட நிர்வாகங்கள் வசூலிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும், சீமை கருவேல மரங்களை அகற்ற மேலும் 10 நாள் அவகாசம் வழங்கியும், அகற்றுவது தொடர்பாக அரசு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என ராமநாதபுரம் கலெக்டர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com