இன்று இரவு 12 மணி முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு! -இதற்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல்.  

narendra modi
rupee-1000

rupeesDocument2

இன்று இரவு 12 மணி முதல் ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது  என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.

இந்நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கலாம்.  

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்படும். விமானம், ரெயில் டிக்கெட்கள் மற்றும் மருந்தகங்களில் நோட்டுகள் அதுவரையில் பெறப்படும்.

நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நாட்டில் வங்கிகளில் ஏ.டி.எம். செயல்படாது. நவம்பர் 9-ம் தேதி நாளை அனைத்து வங்கிகளும் மூடப்படும். பொதுமக்கள் சேவைக்காக அந்த ஒருநாள் மட்டும் செயல்படாது. பண பரிவர்த்தனையில் பிற முறைகளான, ’செக்’, டி.டி., கிரிடிட், டெபிட் கார்டுகள் முறையில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. 

மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.

விரைவில் புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அதிக மதிப்புடைய நோட்டுகளை, குறிப்பிட்ட அளவில் வெளியிட ஆர்.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஏ.டி.எம். மற்றும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கிவிட்டார்கள்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com