செங்கம் பகுதியில் நீண்ட வருடங்களுக்கு பின் புதிய தொடக்கப் பள்ளி! -கிராம மக்கள் மகிழ்ச்சி!

IMAGE 02 IMAGE 01IMAGE 03

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி, பூங்குட்டை கிராமத்தில் நீண்ட வருடங்களுக்கு பின் புதிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு மேல்பென்னாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி சின்னகுழந்தை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணப்பிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் .லோகநாயகி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வம் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்பழகி கலந்து கொண்டு பூங்குட்டை புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் பெயர் பலகை திறந்து வைத்து பள்ளியை தொடக்கி வைத்தனர்.

பூங்குட்டை கிராமத்தில் 500 –க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஏழு வருடங்களாக போராடி இப்போதுதான் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் இக்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமு மற்றும் கிருட்டிணமுர்த்தி ஆகியோர், பள்ளிக்கு தேவையான நாற்காலி, மாணவர்களுக்கு தட்டு, நோட்டு புத்தகங்கள் வழங்கினர்இப்பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.

.இராமாபுரம் தலைமை ஆசிரியர் பரணி, குருமப்பட்டி தலைமை ஆசிரியர் குணசேகர், தளவாநாய்க்கண்பேட்டை தலைமை ஆசிரியர் ஆறுமுகம், பெரியகல்தாம்பாடி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, மேல்பென்னாத்தூர் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலெட்சுமி, ஜோதி, அமலிஜெரினா, ரேகா, மகேஸ்வரி அரசு, ஆறுமுகம், ராஜா உட்பட மேல்பென்னாத்தூர் மற்றும் பூங்குட்டை கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மேல்பென்னாத்தூர் பள்ளி ஆசிரியர் .நாரயணன் நன்றி கூறினார்.

செங்கம் மா.சரவணக்குமார்.