அ.இ.அ.தி.மு.க.கட்சி சட்டமன்ற தலைவராக ஜெ.ஜெயலலிதா தேர்வு! முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்குமாறு ஜெ.ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு!

tn.cm

 

அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.

தமிழக முதலமைச்சராக விரைவில் பொறுப்பேற்குமாறு ஜெ.ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார். புதிய அமைச்சர்களின் பட்டியலை விரைவாக அனுப்பும்படியும் ஆளுநர் ரோசய்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Dr. K. Rosaiah

ஆளுநர் ரோசய்யா அழைப்பு கடிதம்.

ஆளுநர் ரோசய்யா அழைப்பு கடிதம்.

சென்னையில் இன்று (22.05.2015) நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஆளுநர்  ஏற்பு.

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஆளுநர் ஏற்பு.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, அதனை ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து நேரில் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரோசய்யா, ஜெ.ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு அழைப்பு விடுத்து, கடிதம் அனுப்பினார். புதிய அமைச்சரவைப் பட்டியலை விரைந்து அனுப்பும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in