சிவப்பு சந்தன மரங்களை வெட்டிய  கும்பல் மீது, ஆந்திர போலீசார் துப்பாக்கி சூடு! -20 பேர் பலி!  

20-red-sandalwood-smugglers-killed

sandal.jpg1anthira police firesandal.jpg2sandal

red_sandal_wood

தமிழக – ஆந்திர எல்லை பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட கும்பல், சிவப்பு சந்தன மரங்களை வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கடத்தல் கும்பலை போலீசார் எச்சரித்து பிடிக்க சென்றபோது, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிவப்பு சந்தன மரங்களை கடத்தும் கும்பலும் திருப்பி சுட்டது. இதில் சம்பவ இடத்தில் 20 பேர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். கொல்லப்பட்டவர்கள் கூலி தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.

 மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுவோருக்கு சாதாரணமாக தினசரி கூலியாக ரூ. 500 வரை கிடைக்கும். ஆனால், இது போன்று சிவப்பு சந்தன மரங்களை வெட்ட செல்லும் போது அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தினசரி கூலி வழங்கப்படுகிறது.

ஆனால், காட்டுக்குள் மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்களுக்கு இதில் மறைந்துள்ள ஆபத்து தெரியாமல் போலீசார் மற்றும் வனத்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகும் கொடுமை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

உயிரை பணையம் வைத்து சம்பாதிக்கும் பணம் தேவையா? சற்று யோசிக்க வேண்டும்.

-சி.மகேந்திரன்.