கண்டோன்மெண்ட் தேர்தல்: அ.தி.மு.க. வெற்றி!

contonment Office-Building-thomous

பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மெண்ட் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. 

1-வது வார்டில் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயந்திமாலா 516 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள்    -4402
பதிவானவை         -3151
ஜெயந்திமாலா (அ.தி.மு.க)-1541

மகேஸ்வரி(தி.மு.க)   -1025

எழிலரசி (தே.மு.தி.க)  -450
ஷீலா சுரேஷ் (பா.ஜனதா)-65

2-வது வார்டில் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்ராஜா 1806 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மொத்த ஓட்டுகள்    -9223
பதிவானவை         -5917
தேன்ராஜா (அ.தி.மு.க)-2941
கஸ்தூரி ராஜேந்திரன் (தி.மு.க) -1135
பிரகாஷ் (தே.மு.தி.க)  -259
ஆனந்தகுமார் (பா.ஜனதா)-11
ரமேஷ் (வி.சிறுத்தை)    -70

3-வது வார்டில் 20 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் குணசேகரன் 8 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மொத்த ஓட்டுகள்    -3090
பதிவானவை         -2456
குணசேகரன் (அ.தி.மு.க)-960
ஜெயபிரதாப் (சுயேச்சை)   -952
மோகனசுந்தரம் (தி.மு.க)  -360
குணா(பகுஜன் சமாஜ்)-25

4-வது வார்டில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் லாவண்யா 1737 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
மொத்த ஓட்டுகள்    -7579
பதிவானவை         -4896
லாவண்யா (அ.தி.மு.க)-2889
கோபிநாத் (தி.மு.க)   -1162
முருகன் (தே.மு.தி.க)   -226
அருண்குமார் (பா.ஜனதா)-118
சச்சிதானந்தம் (வி.சிறுத்தை)-30
கிருஷ்ணாமூர்த்தி (பகுஜன் சமாஜ்) -27

-சி.மகேந்திரன்.