மீன்வளத் துறையில் படகு ஓட்டுநர் மற்றும் கடலாள் நிரந்தர காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு!

boat

மீன்வளத்துறையில் காலியாக உள்ள மூன்று படகு ஓட்டுநர் தரம்-2      (Boat Driver) பணியிடங்கள் மற்றும் ஒரு கடலாள் (Seaman) பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

படகு ஓட்டுநர் தரம்-2 பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மீன்வளத்துறை பயிற்சி நிலையத்தில் மீன்பிடி முறைகள், கடலாண்மை மற்றும் இயந்திர பராமரிப்பு குறித்தான பயிற்சியில் பயின்று பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 

பொதுப்பிரிவு பொது முன்னுரிமை பெற்றவர் பிரிவில் 1 நபரும் (வயது வரம்பு 18 முதல் 30 வரை), தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பெண்கள் ஆதரவற்ற விதவை முன்னுரிமை பெறாதவர் பிரிவில்   1 நபரும் (வயது வரம்பு 18 முதல் 35 வரை),  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பொது முன்னுரிமை பெற்றவர் பிரிவில் 1 நபரும் (வயது வரம்பு 18 முதல் 32 வரை)  ஆக மொத்தம் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.  வயது வரம்பு 01.07.2014ல் அன்று உள்ளபடி கணக்கிடப்படும்.

கடலாள் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு ஆண்டிற்கு மேலான கடல் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பொதுப்பிரிவு பொது முன்னுரிமை பெற்றவர் பிரிவில் 1 நபர் (வயது வரம்பு 18 முதல் 30 வரை) தேர்ந்தெடுக்கபடவுள்ளனர்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் (அசல் மற்றும் நகலுடன்) 12.01.2015 அன்று காலை 11.00 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மீன்துறை இணை இயக்குநர் அலுவலகம்,

166, வடக்கு கடற்கரைச் சாலை, திரேஸ்புரம்,

(மண்டலம்) தூத்துக்குடி – 628 001.

தொலைபேசி – 0461 – 2320673

-பி.கணேசன் @ இசக்கி.