ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா ஓய்வு!

dilip sinha

ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகப்  பணியாற்றி வந்த  திலிப் சின்ஹா, கடந்த 31 -ந் தேதி ஓய்வு பெற்றுள்ளார்.

திலிப் சின்ஹா ஜெனிவாவில் பணியாற்றிய போது, இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்வதில்  முக்கிய பங்காற்றியிருந்தார்.

கடந்த ஆண்டு, இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதனைத் தோற்கடிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்கும், இவர் ஆதரவளித்திருந்தார்.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளை எடுப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்த, திலிப் சின்ஹாவின் இடத்துக்கு, அனுபவம் மிக்க இராஜதந்திரி ஒருவரை நியமிக்க இந்திய வெளிவிவகார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளராக உள்ள சையிட் அக்பருதீன் பெரும்பாலும், அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஆர்.மார்ஷல்.