சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்! கண் துடைப்பு நாடகம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகம்!

???????????????????????????????

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், அரசு பொதுமருத்துவமனை, காவல்நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல பகுதிகளில் மாடுகள் மற்றும் கழுதைகள் போன்றவை அதிக எண்ணிக்கையில் ஆங்காங்கே சாலையில் சுற்றி திரிகின்றன.

இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குளாகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.

செங்கம் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள், சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து பேரூராட்சி எல்லைக்கு வெளியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், அது மறுபடியும் பழைய இடத்திற்கே திரும்பி வந்துவிடுகிறது. இது கண் துடைப்பு நாடகம் போல் உள்ளது.

எனவே, இந்த கால்நடைகளை பட்டியில் அடைத்தோ அல்லது கோசலையில் விட்டோ பராமரிக்க வேண்டும்.

கால்நடைகளை தேடிவரும் உரிமையாளர்களிடம் பராமரிப்பிற்கானத் தொகையை அபராதமாக வசூலிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்கும்.

– செங்கம். மா.சரவணக்குமார்.