சேற்றில் சிக்கி கொள்ளும் வாகனங்கள்! சிரமத்திற்குள்ளாகி வரும் பொது மக்கள்! – ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினரின் அலட்சியம்!

ye1711P1

ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் இருந்து ஜெரினாக்காடு, முருகன் நகர், லாங்கில் பேட்டை, லுத்தர் பேட்டை உள்ளிட்ட 4 கிராம மக்கள் பயன்படுத்தும் பிராதான சாலைக்கு அடியில் சென்றிருந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட பிச்சனைக்காக 3 அடி ஆழத்திற்கு இந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது .

இரண்டு நாட்கள் சிரமப்பட்டு குடிநீர் குழாயை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சரி செய்தனர். பின்னர் அந்த பள்ளத்தில் வெறும் மண்ணை கொண்டு ஏனோதானோ என்று  நிரப்பினர்.

ஆனால், தற்போது தொடர் மழை பெய்து வருவதால், இந்த சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இந்த சேற்றில் சிக்கி கொள்கிறது. மேலும், பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லவே பயப்படுகின்றனர்.

இந்த பிரச்சனை ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இந்த சாலையை ஏற்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் சரிசெய்ய முன்வராததால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த சாலையை உடனடியா சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

-நவீன் குமார்.