வனரோஜா எம்.பியிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு!

IMAGE 01(2)திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜாவிடம் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் பேசும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி மத்திய அரசு சில்லரை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க திட்டம் மற்றும் பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் என்ற திட்டத்தை பாராளுமன்றத்தில் அமலுக்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது.

தற்சமயம் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் சில்லரை வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள். எனவே. பாராளுமன்றத்தில் இத்திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி பேசும்படி தங்கள் கோரிக்கை மனுவில் தெரிவித்தனர்.

செங்கம் தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் சத்தார், செயலாளர் சுப்பிரமணி, துணைத்தலைவர் ஜி.முரளிதரன், துணை செயலாளர்கள் ஆசை முசீர் அகமது, சேர்மராஜா, செயற்குழு உறுப்பினர்கள் கிருத்திகா பாபு, மண்டி தட்சணாமூர்த்தி, ஜோதி, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர் தாவூத்கான் ஆகியோர் தங்கள் கோரிக்கை மனுவை வனரோஜா எம்.பி. வசம் நேரில் சந்தித்து அளித்தனர்.

சிகரெட் உற்பத்தியை தடைசெய்யாத மத்திய அரசாங்கம், விற்பனையை மட்டும் தடுப்பது எந்த வகையில் நியாயம்?

– செங்கம் மா.சரவணக்குமார்.