தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தில் சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு : இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!

IMG_20141103_111531 IMG_20141103_111603தூத்துக்குடி மேலூர் இரயில் நிலைய சுகாதாரச் சீர்கேடு குறித்தும், குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் குடிநீர் மாசு அடைந்துள்ளது குறித்தும். ‘குடிநீருடன் சாக்கடை நீர் கலக்கும் கொடுமை : தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையம் தூய்மை செய்யப்படுமா?’ என்ற தலைப்பில் 27.10.2014 அன்று மதியம் 2.10 மணிக்கு நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஊடகத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதை அறிந்த இரயில்வே நிர்வாகம், தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்யும் பணியை 28.10.2014 அன்று தொடங்கியது. அவற்றின் தொடர்ச்சியாக சாக்கடை மற்றும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில்  தற்போது ஆக்கப்பூர்வமான பணிகளை இரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

-பி.கணேசன் @ இசக்கி.