புதிய வாக்காளர் சேர்த்தல் குறித்து கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

DCP2(8)1. 1.1.2015 தேதியினை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் (15.10.2014) வெளியிடப்படுகிறது.

2. 1.1.2015-ல்; 18 வயது நிறைவடைந்தவர்கள் (1.1.1997 க்கு முன்னர் பிறந்தவர்கள்) வாக்காளர்காளக பதிவு செய்யப்படுவார்கள்.

3. வாக்காளர் பட்டியல் 17.10.2014 மற்றும் 30.10.2014 அன்று கிராம சபையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

4. 15.10.2014 முதல் 10.11.2014 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு மனுக்கள் பெறப்படும்.

5. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மனுக்களை பெறுவார்கள். மேற்படி மையங்களில் 19.10.2014 மற்றும் 02.11.2014 ஆகிய தேதிகளில் மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படும்.

6. மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு 05.01.2015 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 18 வயது ப+ர்த்தியான புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் புகைபட அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான 25.1.2015 அன்று வழங்கப்படும்.

7. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கல்லுரிகளில் பயிலும் 52 மாணவர்கள் (கேம்பஸ் அம்பாஸ்டர்கள்) கலந்து கொண்டனர்.

8. கல்லுரியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களையும் விடுதலின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய உதவி செய்யவும் கேட்டு;க்கொள்ளப்பட்டனர்.

9. ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் முறை. வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் முறை மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

பி.கணேசன் @ இசக்கி.