கொலை மிரட்டல் காரணமாக ‘ஈழமுரசு’ பத்திரிகை இழுத்து மூடப்பட்டது!

paper 1 ellamurasu1995-ம் ஆண்டு தமிழர் திருநாளில் கப்டன் கஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழமுரசு’ பத்திரிகை, பொருளாதார நெருக்கடியால் 2004-ம் ஆண்டில் மூடப்பட்டது.

அதன் பின்னர் பூபாளம் என்ற நிறுவனத்தின் மூலம் ‘ஈழமுரசு’ பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அந்த நிறுவனமும் பல்வேறு நெருக்கடிகளை தாக்குப் பிடிக்க முடியாமல் ‘ஈழமுரசு’ பத்திரிகையை கைவிட்டது.

அதன் பிறகு ‘ஊடக இல்லம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அந் நிறுவனத்தின் மூலம் ‘ஈழமுரசு’ பத்திரிகை இலவச இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு வணிக நிறுவனங்கள் அதிக அதிக அளவில் விளம்பரங்கள் மூலம் ஆதரவு அளித்து வந்தன.

இந்நிலையில் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் ‘ஈழமுரசு’ பத்திரிகைக்கு தொடர்ந்து பல முறை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் கொலை மிரட்டல் வந்ததின் காரணமாகவும், விளம்பரங்கள் மூலம் ஆதரவு அளித்து வரும் வணிகர்களை ‘எல்லாளன் படை’ மிரட்டியதின் விளைவாகவும் ‘ஈழமுரசு’ பத்திரிகை நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

-ஆர்.மார்ஷல்.