பொய் செய்தி வெளிட்ட ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது வழக்கு! ”போலி விளம்பரங்களும், ஊடக வியாபாரிகளும்”

dinamalardinamalarதமிழக முதல்வர் சார்பில், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு எதிராக, சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த, 30-ம் தேதி, ‘தினமலர்’ நாளிதழில், ‘அவலம். இடிந்த கட்டடத்திற்காக, விதிகளை தளர்த்தி, 2 அரசாணைகள் – சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.,’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது.

இது, தமிழக முதல்வருக்கு எதிரான, அவதூறான செய்தி. விதிகள் தளர்த்தப்பட்டு, நில உரிமையாளருக்கு சாதகமாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதில், உண்மையில்லை. அது, பொய்யானது.

இரண்டு அரசாணைகளும், கட்டடத்தின் கட்டுமானத்துக்கோ, கட்டடத்தின் உறுதித்தன்மைக்கோ, விதிகளை தளர்த்தவில்லை. நில விரிவாக்கம் தொடர்பாக தான், அந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது.

எனவே, கட்டடத்தின் வடிவமைப்பு, கட்டடத்தின் பாதுகாப்பு தன்மைக்கு விதிகளை தளர்த்தியதாக, கருதக் கூடாது. பத்திரிகையில் வந்த செய்தியானது, முதல்வரின் நடவடிக்கையை, குற்றம் சாட்டுவதாக உள்ளது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொய் மற்றும் அவதூறான செய்திகளை வெளியிடுவது ‘தினமலர்’ ஊடகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல! அவர்களின் பிழைப்பே அதுதான்!

”போலி விளம்பரங்களும், ஊடக வியாபாரிகளும்”

தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்தும் தினமலர், தினத்தந்தி, தினகரன்… போன்ற ஊடகங்களில்தான் அதிகளவில் வெளிவருகிறது.

இதற்காகவே ‘சிறப்பு மலர்’ வெளியிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு அந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மையைக் கூட விசாரிக்காமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியில் போட்டி போட்டு கொண்டு விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.

இதுபோன்ற ஊடகங்களில் வரும் ஆடம்பரமான போலி விளம்பரங்களைப் பார்த்துதான், அப்பாவி பொதுமக்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி சிறுக, சிறுக சேர்த்து வைத்தப் பணத்தை, வாழ்கையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக கடனோ, உடனோ வாங்கி இதுபோன்றக் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கொட்டிக் கொடுத்து கடனாளி ஆகிறார்கள்.

இதுபோன்று ஏதாவது அசம்பாவிதம் நடைப்பெற்றால் யோக்கிய சிகாமணியைப் போல 8 பத்திக்கு கட்டுரைத் தீட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இதுபோன்று தான் ஈமு கோழி மோசடி…மற்றும் என்னற்ற ஏமாற்று நிறுவனங்கள் ! இதற்கு முக்கிய காரணமே ‘தினமலர்’ போன்ற ஊடகங்கள்தான்.

எனவே, தேர்தல் நேரங்களில் விளம்பரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுப்பி அங்கீகாரம் வாங்கிய பிறகுதான் விளம்பரங்களை வெளியிட முடியும்.

அதைப் போல, ‘விளம்பரக் தணிக்கை குழு’ ஒன்றை அமைத்து ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பு, அதற்கு என்று அமைக்கப்பட்ட தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்ற பிறகு தான், விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை அரசு அறிவிக்க வேண்டும்.

துக்க அறிவிப்புகள் மற்றும் கண்ணீர் அஞ்சலி விளம்பரங்களைத் தவிர, மற்ற அனைத்து விளம்பரங்களையும் தணிக்கைக்கு உட்படுத்திய பிறகுதான் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் சட்டமாக இயற்றினால், போலி நிறுவனங்கள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

மேலும், பொய்யான, கவர்ச்சிக்கரமான, போலியான, விளம்பரங்களை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி, மஞ்சள் குளித்து வரும் தினமலர், தினத்தந்தி, தினகரன்… போன்ற ஊடகங்களும் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

விளம்பரங்கள் இல்லையென்றால், தண்ணீரில் இருக்கும் மீனைத் தரையில் தூக்கி வீசினால் எப்படி துள்ளி, துடித்து சுருண்டு செத்துப் போகுமோ, அதைப்போல ஊடக வியாபாரிகளும் சுருண்டு செத்துப் போவார்கள்.

அதன்பிறகு உண்மையான ஊடக நிறுவனங்கள் மட்டுமே நாட்டில் மிஞ்சும். அதன் மூலம் நாட்டிற்கும், மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.

ஊடகத்தின் மீதும், ஊடகக்காரர்கள் மீதும் பிரயோகிக்கப்படுவது மட்டும்தான் ஊடக வன்முறை என்று அர்த்தம் அல்ல! இதழியல் தர்மத்திற்கு விரோதமாக செயல்படும் ஊடக வியாபாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடக வன்முறைதான் என்பதை சம்மந்தப்பட்ட ஊடக வியாபாரிகள் உணர வேண்டும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

E.Mail: drduraibenjamin@yahoo.in